எங்களைப் பற்றி

panthal.in தமிழ்நாட்டின் கல்யாண மண்டப உரிமையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட மென்பொருள்.

பெரும்பாலான மண்டபங்கள் இன்றும் நோட்டுப் புத்தகம், காலண்டர், வாட்ஸ்அப் செய்திகளை நம்பியே முன்பதிவுகளை நடத்துகின்றன. ஒரே தேதியை இருவருக்குக் கொடுப்பது, முன்பணக் கணக்கு தவறுவது, மின் கட்டணத்தில் வாக்குவாதம் — இவை அனைத்தும் இதனால் வருபவை.

panthal.in இந்தச் சிக்கல்களைத் தீர்க்கவே உருவானது: தமிழில், போனில், எளிமையாக. முகூர்த்த நாட்கள், தமிழ் தேதிகள், GST பில் என நம் ஊர் மண்டபங்களின் உண்மையான வேலைமுறைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்போது panthal.in மண்டப உரிமையாளர்களும் அவர்களின் பணியாளர்களும் மட்டுமே பயன்படுத்தும் நிர்வாகக் கருவி. பொதுமக்கள் மண்டபம் தேடும் வசதி போன்றவை எதிர்காலத் திட்டங்கள்.

தொடர்பு →